gv prakash

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் அரசிற்கும் இடையே நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, இரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, குடியரசு தினத்தன்று நடைபெற்ற ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.

Advertisment

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="82e778a6-9b48-4f33-b4f9-3d49ca017c90" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_44.jpg" />

Advertisment

இந்த நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்துவது தற்கொலைக்குச் சமம். மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது ஜனநாயகமே. அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c409d6d8-d352-4408-abe8-aa4404fdfb20" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip_10.jpg" />